Verse 1என் ஆவி ஆன்மா தேகமும்
இதோ படைக்கிறேன்;
என்றும் உம் சொந்தமாகவும்
பிரதிஷ்டை செய்கிறேன்.
Verse 2ஆ இயேசு வல்ல ரட்சகா
உம் நாமம் நம்புவேன்;
ரட்சிப்பீர் மா தயாபரா
உம் வாக்கை வேண்டுவேன்.
Verse 3எப்பாவம் நீங்க உறுப்பு
தந்தேன் சமூலமாய்;
போராட்டம் வெற்றி சிறப்பு
படைக்கலங்களாய்.
Verse 4நான் உம்மில் ஜீவித்தல் மகா
மேலான பாக்கியம்;
தெய்வ சுதா என் ரட்சகா
என் ஜீவனாயிரும்.
Verse 5என் நாதா திரு ரத்தத்தால்
சுத்தாங்கம் சொந்தமே;
ஆனேன்! உம் தூய ஆவியால்
பலி நான் உமக்கே.
Verse 1en aavi aanmaa dhaegamum
idho padaikkiraen;
endrum um sondhamaagavum
piradhishtai seigiraen.
Verse 2aa yesu valla ratchagaa
um naamam nambuvaen;
ratchippeer maa dhayaabaraa
um vaakkai vaenduvaen.
Verse 3eppaavam neenga uruppu
thandhaen samoolamaai;
poaraattam vetti sirappu
padaikkalangalaai.
Verse 4naan ummil jeeviththal magaa
maelana baakkiyam;
dheiva sudhaa en ratchagaa
en jeevanaayirum.
Verse 5en naadhaa thiru raththaththaal
suththaangam sondhamae;
aanaen! um thooya aaviyaal
bali naan umakkae.
Download Song