Verse 1என் களிப்புக்குக் காரணம்
என் நல்ல நாதரே;
பகலில் நீர் என் மகிமை
ராவில் என் ஜோதியே.
Verse 2இருளிலே நீர் தோன்றினால்
என் மனம் மகிழும்;
நீர் விடிவெள்ளி ஆனதால்
என்னில் பிரகாசியும்.
Verse 3இயேசுவைத் தந்த தயவு
என் செல்வமானதால்
என் ஆத்துமா சந்தோஷித்து
மகிழும் வாழ்வினால்.
Verse 4நரகத்துக்கும் சாவுக்கும்
அஞ்சாமல் இருப்பேன்;
தெய்வன்பும் விசுவாசமும்
கொண்டு நான் வெல்லுவேன்.
Verse 1En kalippukkuk kaaranam
En nalla naathare;
Pagalil neer en magimai
Raavil en jothiye.
Verse 2Irulile neer thondrinaal
En manam magizhum;
Neer vidivelli aanadhaal
Ennil pirakaasiyum.
Verse 3Yesuvaith thantha thayavu
En selvamaanadhaal
En aaththumaa santhoshiththu
Magizhum vaazhvinaal.
Verse 4Naragaththukkum saavukkum
Anjaamal iruppen;
Theivanbum visuvaasamum
Kondu naan velluven.
Download Song