Verse 1என் கர்த்தாவே உம்மில் தான்
முழு நெஞ்சத்தாலே நான்
வாஞ்சை கொண்டு நித்தமும்
லோக வாழ்வை அற்பமும்
குப்பையும் என்றெண்ணுவேன்
உம்மையே சிநேகிப்பேன்.
Verse 2லோகத்தாரின் களிப்பு
துக்கங்கொண்ட நெஞ்சுக்கு
சஞ்சலத்தையன்றியே
தேற்றத்தை உண்டாக்காதே;
உம்மையே சிநேகிப்பேன்
அதால் பாக்கியம் அடைவேன்.
Verse 3தேவரீரில் வாழ்வெல்லாம்
பூர்த்தியாகவே உண்டாம்;
உம்மில் வாஞ்சை கொள்வோனாய்
உண்மையான நேசனாய்
சேர்வோனுக்குத் தேவரீர்
அந்த வாழ்வைக் கொடுப்பீர்.
Verse 4ஆறுதலும் பூரிப்பும்
ஜீவனும் மகிழ்ச்சியும்
உம்மால்தானே என்றைக்கும்
குறைவின்றிக் கிடைக்கும்;
நீரே அன்பின் காரணர்;
கருணைத் தயாபரர்.
Verse 1En karththave ummil thaan
Muzhu nenjaththaale naan
Vaanjai konndu niththamum
Loga vaazhvai arppamum
Kuppaiyum endrennuven
Ummaiye sinegippen.
Verse 2Logaththaarin kalippu
Thukkangonnda nenjukku
Sanjalaththaiyandriye
Thetraththai undaakkaathe;
Ummaiye sinegippen
Athaal baakkiyam adaiven.
Verse 3Thevareeril vaazhvellaam
Poorththiyaagave undaam;
Ummil vaanjai kolvonaai
Unmaiyaana nesanaai
Servonukkuth thevareer
Antha vaazhvaik koduppeer.
Verse 4Aaruthalum poorippum
Jeevanum magizhchiyum
Ummaal thaane endraikkum
Kuraivindrik kidaikkum;
Neere anbin kaaranar;
Karunaith thayaaparar.
Download Song