Verse 1என் மனது
துடிக்குது
குலைபதைத்து நோகும்
தேவமைந்தனின் உடல்
கல்லறைக்குப் போகும்.
Verse 2ஆ அவரே
மரத்திலே
அறையப் பட்டிறந்தார்
கர்த்தர் தாமே பாவியின்
சாவத்தைச் சுமந்தார்.
Verse 3என் பாவத்தால்
என் தீங்கினால்
இக்கேடுண்டாயிருக்கும்;
ஆகையால் என்னுள்ளத்தில்
தத்தளிப்பெடுக்கும்.
Verse 4என் ஆண்டவர்
என் ரட்சகர்
வதைந்த மேனியாக
ரத்தமாய்க் கிடக்கின்றார்
என் ரட்சிப்புக்காக.
Verse 5வெட்டுண்டோரே
ஆ உம்மையே
பணிந்தேன் ஆவிபேணும்
ஆகிலும் என் நிமித்தம்
நான் புலம்பவேண்டும்.
Verse 6குற்றமில்லா
மகா கர்த்தா
உமது ரத்தம் ஊறும்;
மனந்தாபமின்றி யார்
அதைப் பார்க்கக் கூடும்.
Verse 7ஆ இயேசுவே
என் ஜீவனே
நீர் கல்லறைக்குள்ளாக
வைக்கப்பட்டதைத் தினம்
நான் சிந்திப்பேனாக.
Verse 8நான் மிகவும்
எந்நேரமும்
என் மரணநாள் மட்டும்
என் கதியாம் இயேசுவே
உம்மை வாஞ்சிக்கட்டும்.
Verse 1en manadhu
thudikkudhu
kulaipadhaiththu nogum
dhevamaindhanin udal
kallaraikkup pogum.
Verse 2aa avarē
maraththilē
araiyap pattirundhaar
karththar thaamē paaviyin
saavaththai sumandhaar.
Verse 3en paavaththaal
en theenginaal
ikkēdundaayirukkum;
aagaiyaal ennullaththil
thaththalippedukkum.
Verse 4en aandavar
en ratchagar
vadhaindha mēniyaaga
raththamaaik kidakkindraar
en ratchippukkaaga.
Verse 5vettundōrē
aa ummaiyē
panindhēn aavibēnum
aagilum en nimiththam
naan pulambavendum.
Verse 6kutramillaa
mahaa karththaa
umadhu raththam oorum;
manandhaabamindri yaar
adhaip paarkkak koodum.
Verse 7aa iyēsuvē
en jeevanē
neer kallaraikkullaaga
vaikkappattadhai dhinam
naan sindhippēnaaga.
Verse 8naan migavum
ennēramum
en marananaal mattum
en gathiyaam iyēsuvē
ummai vaanjikkattum.
Download Song