Yen Meippar Yesu Krishthuthan
Verse 1என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான்
நான் தாழ்ச்சியடையேனே;
ஆட்கொண்டோர் சொந்தமான நான்
குறையடைகிலேனே.
Verse 2ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால்
என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்;
மெய் மன்னாவாம் தம் வார்த்தையால்
நல் மேய்ச்சல் எனக்கீவார்.
Verse 3நான் பாதை விட்டு ஓடுங்கால்
அன்பாகத் தேடிப் பார்ப்பார்;
தோள்மீதில் ஏற்றிக் காப்பதால்
மகா சந்தோஷங்கொள்வார்.
Verse 4சா நிழல் பள்ளத்தாக்கிலே
நான் போக நேரிட்டாலும்
உன் அன்பின் கோலைப் பற்றவே
அதே என் வழி காட்டும்.
Verse 5இவ்வேழைக்கும் ஓர் பந்தியை
பகைஞர்க்கெதிர் வைத்தீர்;
உம்மாவியால் என் சிரசை
தைலாபிஷேகம் செய்வீர்.
Verse 6என் ஆயுள் எல்லாம் என் பாத்திரம்
நிரம்பி வழிந்தோடும்;
ஜீவாற்றின் நீரால் என்னுள்ளம்
நிறைந்து பொங்கிப் பாயும்.
Verse 7என் ஜீவ காலம் முற்றிலும்
கடாட்சம் பெற்று வாழ்வேன்;
கர்த்தாவின் வீட்டில் என்றைக்கும்
நான் தங்கிப் பூரிப்பாவேன்.
Verse 1en meyppar yesu kristhuthaan
naan thaazhchchiyadaiyaene;
aatkondor sonthamaana naan
kuraiyadaiyilaenae.
Verse 2jeevaatril odum thanneeraal
en aathmath thaagam theerppaar;
mey mannaavaam tham vaarththaiyaal
nal meychchal enakkeevaar.
Verse 3naan paathai vittu odungaal
anbaagath thaedip paarppaar;
tholmeedhil aetrik kaappathaal
mahaa santhoshangkolvaar.
Verse 4saa nizhal pallaththaakkilae
naan poaga naerittaalum
un anbin koalaip pattravae
athae en vazhi kaattum.
Verse 5ivvaezhaikkum or panthiyai
pagainjarkkethir vaiththeer;
ummaaviyaal en sirasai
thailaapishaegam seyveer.
Verse 6en aayul ellaam en paaththiram
nirambi vazhinthoadum;
jeevaattrin neeraal ennnullam
nirainthu pongip paayum.
Verse 7en jeeva kaalam muttrilum
kadaatcham pettru vaazhvaen;
karththaavin veettil endraikkum
naan thangip poorippaavaen.
Download Song