Yen Munne Meippar Pogirar
Verse 1என் முன்னே மேய்ப்பர் போகிறார்
நல்மேய்ப்பராகக் காக்கிறார்
ஓர்காலும் என்னைக் கைவிடார்
நேர் பாதை காட்டிப் போகிறார்.
Verse 2முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!
என் முன்னே சென்றுபோகிறார்!
நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்
அன்போடு பின்சென்றேகுவேன்.
Verse 3கார் மேகம் வந்து மூடினும்
சீர் ஜோதி தோன்றி வீசினும்
என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்
என்றைக்கும் முன்னே போகிறார்.
Verse 4மெய்ப் பாதைகாட்டி! பின்செல்வேன்
தெய்வீக கையால் தாங்குமேன்
எவ்விக்கினம் வந்தாலும் நீர்
இவ்வேழை முன்னே போகிறீர்.
Verse 5ஒப்பற்ற உம் காருணியத்தால்
இப்பூமி பாடு தீருங்கால்
நீர் சாவை வெல்லச் செய்குவீர்
பேரின்பம் காட்டி முன்செல்வீர்.
Verse 1En munne meippar pogiraar
Nalmeipparaagak kaakkiraar
Orkaalum ennaik kaividaar
Ner paadhai kaatti pogiraar.
Verse 2Mun selginraar! Mun selginraar!
En munne sendru pogiraar!
Nal meippar satham ariven
Anbodu pin sendreguven.
Verse 3Kaar megam vandhu moodinum
Seer jothi thondri veesinum
En vaazhvu thaazhvil neengidaar
Endraikkum munne pogiraar.
Verse 4Meip paadhai kaatti! Pin selven
Deiveega kaiyaal thaangumeen
Evvikkinam vandhaalum neer
Ivvezhai munne pogireer.
Verse 5Oppatra um kaarunniyathaal
Ippoomi paadu theerungaal
Neer saavai vellach seiguveer
Perinbam kaatti mun selveer.
Download Song