என்னுடைய சாவின் சாவே
என் உயிரின் உயிரே
என்னை மீட்க நீர் கர்த்தாவே
தேவ கோபத் தீயிலே
பாய்ந்து மா அவதியாகப்
பட்ட கன வாதைக்காக
உமக்காயிரத் தரம்
இயேசுவே சங்கீர்த்தனம்.
Verse 2
கேட்டின் சங்கிலிகளுக்கு
என்னை நீங்கலாக்கவே
உம்மைத்தீயோர்துஷ்டத்துக்கு
நீரே தேவமைந்தனே
சூறையிட்ட கள்ளனாக்க்
கட்டப்பட்ட நிந்தைக்காக
உமக்காயிரந் தரம்
இயேசுவே சங்கீர்த்தனம்.
Verse 3
நான் சுகிக்க நீர் இக்கட்டு
துன்பம் வாதை நோவிடர்
குட்டறை பொல்லாப்பும்பட்டு
வாரடியும் பட்டவர்.
ஆசீர்வாதமே உண்டாக
சாபமானீர் எனக்காக;
உமக்காயிரந் தரம்
இயேசுவே சங்கீர்த்தனம்.
Verse 4
ஜீவக்ரீடம் நான் தரித்து
வாழவும் உயரவும்
தூஷணமெல்லாஞ் சகித்து
நிந்தை துப்புதலையும்
ஏற்றக்கொண்டு எண்ணமற்ற
முள்முடியால் சூட்டப்பட்ட
உமக்காயிரந் தரம்
இயேசுவே சங்கீர்த்தனம்.
Verse 5
நான் நான் ஆக்கினைப்படாமல்
பூரிப்பாய் மகிழவே
சுயஉடலைப் பாராமல்
வாதிப்பாரின் இச்சைக்கே
அதைவிட்டு கள்ளர்கிட்ட
தூக்கப்பட்டோராய்த் தவித்த
உமக்காயிரந் தரம்
இயேசுவே சங்கீர்த்தனம்.
Verse 6
என் அஞ்ஞாயத்தைக் கழித்து
என்னை மீட்டு விடவே
நோவு யாவையும் சகித்து
நல்ல மனதுடனே
ரத்தஞ்சிந்தி மா நிர்ப்பந்த
சிலுவையிலே இறந்த
உமக்காயிரந் தரம்
இயேசுவே சங்கீர்த்தனம்.
Verse 7
உம்முடைய பணிவாலே
என் இடுப்பின் ஆக்கினை
உம்முடைய நிந்தையாலே
என்னுடைய சிறுமை
தீரும்; உம்முடைய சாவு
சாவில் எனக்கான தாவு
உமக்காயிரந் தரம்
இயேசுவே சங்கீர்த்தனம்.
Verse 8
இயேசுவே நிர் சாந்தமாக
உள்ளேயும் புறம்பேயும்
உயிர் போகுமளவாகப்
பட்ட பாடனைத்துக்கும்
என்ன சொல்வேன் எனக்காகப்
பட்டீரென்று தாழ்மையாக
உம்மை நான் வணங்குவேன்
என்றென்றைக்கும் போற்றுவேன்.
Verse 1
Ennudaiya saavin saave
En uyirin uyire
Ennai meetka neer karththaave
Deva kobath theeyile
Paaindhu maa avadhiyaagap
Patta kana vaadhaikkaaga
Umakkaayirath tharam
Yesuve sangeerththanam.