Yentrentrum Jeevippor Atharisanar
Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 என்றென்றும் ஜீவிப்போர் அதரிசனர்
எட்டா ஒளியில் உள்ளோர் சர்வ ஞானர்
மா மேன்மை மகத்துவர் அநாதியோராம்;
சர்வவல்லோர் வென்றோர் நாமம் போற்றுவோம்.
Verse 2 ஓய்வோ துரிதமோ இன்றி ஒளி போல்
ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால்
வான் எட்டும் மலைபோல் உம் நீதி நிற்கும்
அன்பு நன்மை பெய்யும் உந்தன் மேகமும்.
Verse 3 பேருயிர் சிற்றுயிர் ஜீவன் தேவரீர்
யாவர்க்குள்ளும் உய்வீர் மெய்யாம் ஜீவன் நீர்
மலர் இலைபோல் மலர்வோம் செழிப்போம்
உதிர்வோம் சாவோம் நீரோ மாறாதோராம்.
Verse 4 மா மாட்சி பிதா தூய ஜோதி தந்தாய்!
தாழுவர் உம் தூதர் மா வணக்கமாய்
துதிப்போம் மகத்தாய்க் காணத் தோற்றுவீர்
கண் கூசும் ஜோதியாம் ஜோதி தேவரீர்.
Verse 1 Endrendrum jeevippor adharisanar
Etta oliyil ullor sarva gnaanar
Maa menmai magaththuvar anaadhiyoraam;
Sarvavallor vendror naamam potruvom.
Verse 2 Oyvo thurithamo indri oli pol
Odungaa pondraa shakthiyodaalvadhaal
Vaan ettum malai pol um needhi nirkum
Anbu nanmai peyyum undhan megamum.
Verse 3 Peruyir sitruyir jeevan dhevareer
Yaavarkkullum uyveer meyyaam jeevan neer
Malar ilaipol malarvom sezhippom
Uthirvom saavom neero maaraadhoraam.
Verse 4 Maa maatchi pithaa thooya jothi thandhaai!
Thazhuvar um thoodhar maa vanakkamaai
Thudhippom magaththaai kaanath thotruveer
Kan koosum jothiyaam jothi dhevareer.
Share
Download Song
Cancel
Download