எப்போதும் இயேசு நாதா
உம்மைப் பின்பற்றுவேன்
என்றே தீர்மானமாக
நான் வாக்குக் கொடுத்தேன்;
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்
அப்போது அஞ்சிடேன்;
முன்சென்று பாதை காட்டும்
நான் வழி தவறேன்.
Verse 2
பூலோக இன்பம் செல்வம்
வீண் ஆசாபாசத்தால்
என் ஆத்துமா மயங்காமல்
தெய்வீக பலத்தால்
நீர் துணைநின்று தாங்கும்
என் அருள் நாயகா;
தீங்கணுகாமல் காரும்
மா வல்ல ரட்சகா.
Verse 3
ஆங்காரம் சுய சித்தம்
தகாத சிந்தையால்
மா கலக்கம் உண்டாகி
நான் தடுமாறினால்
நீர் பேசும் அருள் நாதா
கொந்தளிப்படங்கும்;
உம் நேச சத்தம் கேட்டு
என் ஆவி மகிழும்.
Verse 4
பின்பற்றினால் விண் வீட்டில்
பேரின்பம் பெறுவீர்
என்றே உம் சீஷர் நோக்கி
நீர் வாக்கு அளித்தீர்;
அவ்வருள் வாக்கை நம்பி
இவ்வேழை அடியேன்
இதோ பின்செல்வேன் என்று
பிரதிக்னை பண்ணினேன்.
Verse 5
ஓயாமல் பெலன் தாரும்
உம்மடிச்சுவட்டில்
கால் வைத்து நடந்தேகி
நான் யாத்திரை செய்கையில்
நீர் வழி காட்டி என்னை
கைதாங்கி வருவீர்;
அப்பாலே மோட்ச வீட்டில்
பேர் வாழ்வை அருள்வீர்
Verse 1
Eppodhum yesu naadhaa
Ummai pinpattruven
Endre theermaanamaaga
Naan vaakkuk koduththen;
Neer ennaith thaangik kaappeer
Appodhu anjidaen;
Mun சென்று paadhai kaattum
Naan vazhi thavaraen.
Verse 2
Boologa inbam selvam
Veen aasaabaasaththaal
En aaththumaa mayangaamal
Deiveega balaththaal
Neer thunai nindru thaangum
En arul naayagaa;
Theenganugaamal kaarum
Maa valla ratchagaa.
Verse 3
Aangaaram suya siththam
Thagaadha sinthaiyaal
Maa kalakkam undaagi
Naan thadumaarinaal
Neer paesum arul naadhaa
Kondhalipadangum;
Um naesa satham kaettu
En aavi magizhum.