Verse 1இயேசு பாலனாய் பிறந்தார்
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லணை மீதிலே பிறந்தார்
Verse 2உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியம் உண்டாவதாக
என்று தேவ தூதர் பாடிட – இயேசு
Verse 3விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மானிடவதாரமாய்த்
தன்னைப் பலியாகத் தந்த ஒளி இவர்
தம்மை பணிந்திடுவோம் வாரும் – இயேசு
Verse 4ஓடி அலைந்திடும் பாவியைத்
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும் – இயேசு
Verse 5கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும் – இயேசு
Verse 6அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதல் அளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரை பணிவோம் வாரும் – இயேசு
Verse 1Yesu baalanai pirandaar
Yesu devane bethalegemile
Ezhai kolamaai munnannai
Pullanai meetile pirandaar
Verse 2Unnathathil deva magimai
Boomiyile samaadhaanammum
Maanidaril piriyam undaavathaaga
Endru deva thoodhar paadida - Yesu
Verse 3Vinnai veruttha immaanuvēl
Vindhai maanidavathaaramaai
Thannaip baliyaagath thantha oli ivar
Thammai panninthiduvom vaarum - Yesu
Verse 4Odi alainthidum paaviyai
Thedi azhaikkum ippaalagan
Paavangalin naasar paavigalin nēsar
Paadham panninthiduvom vaarum - Yesu
Verse 5Kaigal kattina devaalayam
Karthar thangum idamaagumo
Nam idhayamathil Yesu piranthida
Nammai aliththiduvom vaarum - Yesu
Verse 6Anbin soroobi ippaalane
Andi varuvōrin thanjamē
Aarudhal aliththu allal agattridum
Aandavarai pannivom vaarum - Yesu
Download Song