LyricFront

Yesu Devanai Thuthiduvom

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இயேசு தேவனை துதித்திடுவோம் இயேசு ராஜனை வாழ்த்திடுவோம் இதயம் போங்க நன்றியுடனே போற்றி உயர்த்தி பணிந்திடுவோம்
Verse 2
வார்த்தை வடிவாய் வந்தவரை வாதைப் பிணியை தீர்த்தவரை கண்ணின் மணிபோல் காத்த தயவை கருணை உருவைத் துதித்திடுவோம்
Verse 3
அடிமை ரூபம் எடுத்தவரை அகிலம் பணிந்திடவே செய்தவரை உயர்ந்த நாமம் பெற்று விளங்கும் உன்னதர் அவரைப் போற்றிடுவோம்
Verse 4
இருளை நீக்கும் மாஜோதியாய் உலகில் வந்த அருள் வடிவை ஜீவ ஒளியாய் திகழும் அவரை இன்றும் என்றும் துதித்திடுவோம் - இயேசு
Verse 5
தேவத்தன்மையை வெளிப்படுத்த தேவ மைந்தனாய் வந்தவரை தேவ சுதராய் நாமும் விளங்க கிருபை உருவைத் துதித்திடுவோம்
Verse 6
பாவ சாப மரணத்தை ஜெயித்து வென்று எழுந்தவரை மகிமை சூழ திரும்பி வந்திடும் வேந்தன் அவரைத் துதித்திடுவோம் - இயேசு

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?