Verse 1இயேசு பாவி நேசர்தாம்
வழிதப்பிப்போன யாரும்
அவரால் திரும்பலாம்
அவரால் எக்கேடும் மாறும்.
அவரால் ரட்சிப்புண்டாம்;
இயேசு பாவி நேசர்தாம்.
Verse 2நாம் மகா அபாத்திர்ர்
அவர் கிருபை புரிந்தோர்
ரட்சிப்போம் என்றாண்டவர்
சத்தியமிட்டே மொழிந்தார்
அவர் கிருபாசம்;
இயேசு பாவி நேசர்தாம்.
Verse 3மந்தையில் காணாதது
மேய்ப்பன் கவையால் திரும்பும்
பாவத்தில் விழுந்தது
அவர் கையினால் எழும்பும்
கெட்டுப்போக மாட்டோம் நாம்;
இயேசு பாவி நேசர்தாம்.
Verse 4அழும் பாவகிளையே
தம்மண்டைக் கழைக்கிறாரே
வரும் பாவியைத் தாமே
தேவப் பிள்ளையாக்குவாரே;
அதை நம்பி வரலாம்.
இயேசு பாவி நேசர்தாம்.
Verse 5துக்கப்பட்டென் பாவத்தை
அறிவிக்க இங்கே வந்தேன்
மீட்பரே நீர் கிருபை
செய்யும் அப்போமீட்பைக்கண்டேன்
போயிற்றென் வியாகுலம்;
இயேசு பாவி நேசர்தாம்
Verse 6பாவம் சிவப்பாகிலும்
பஞ்சைப் போலாம் எக்கறையும்
அவர் ரத்தம் கழுவும்;
நீதியின் வெள்ளங்கியையும்
ஈவார் அது நிச்சயம்;
இயேசு பாவி நேசர்தாம்.
Verse 7மனச்சாட்சி குத்தினால்
பருவம் தீர்ந்ததென்று சொல்வார்.
மோசே குற்றஞ் சாட்டினால்
அவர் பிணை நின்றுகொள்வார்.
நீங்கிற்றாக்கினை எல்லாம்;
இயேசு பாவி நேசர்தாம்.
Verse 8இயேசு பாவி நேசர்தாம்
அவர் என்னையும் நேசித்தார்
நானும் வந்து சேரலாம்
எனக்கும் மன்னிப்பளித்தார்
சாவிப்போ தாதாயமாம்;
இயேசு பாவி நேசர்தாம்.
Verse 1Yesu paavi nesar thaam
Vazhi thappippona yaarum
Avaraal thirumbhalaam
Avaraal ekkedum maarum.
Avaraal ratchippundaam;
Yesu paavi nesar thaam.
Verse 2Naam mahaa apaaththirar
Avar kirubai purindhor
Ratchippom endraandavar
Saththiyamitte mozhindhaar
Avar kirubaasam;
Yesu paavi nesar thaam.
Verse 3Mandhaiyil kaanaathathu
Meippan kavaiyaal thirumbum
Paavaththil vizhundhathu
Avar kaiyinaal ezhumbum
Kettuppoga maattom naam;
Yesu paavi nesar thaam.
Verse 4Azhum paavakiliye
Thammandaik kazhaikkiraare
Varum paaviyai thaame
Devap pillaiyaakkuvaare;
Adhai nambi varalaam.
Yesu paavi nesar thaam.
Verse 5Thukkappatten paavaththai
Arivikka inge vandhen
Meetpare neer kirubai
Seyyum appomeetpaik kanden
Poyittren viyaakulam;
Yesu paavi nesar thaam
Verse 6Paavam sivappaagilum
Panjaip polaam ekkaraiyum
Avar raththam kazhuvum;
Neethiyin vellangiyaiyum
Eevar adhu nichchayam;
Yesu paavi nesar thaam.
Verse 7Manasaatchi kuththinaal
Paruvam theerndhadhendru solvaar.
Mose kutram saattinaal
Avar pinai nindrukolvaar.
Neengittraakkinai ellaam;
Yesu paavi nesar thaam.
Verse 8Yesu paavi nesar thaam
Avar ennaiyum nesiththaar
Naanum vandhu seralaam
Enakkum mannippaliththaar
Saavippo thaathaayamaam;
Yesu paavi nesar thaam.
Download Song