Verse 1இயேசு பெரியவர் நம்
இயேசு பெரியவர் - 2
என்றென்றும் இயேசு பெரியவர் - அவர்
ஒருபோதும் கைவிடமாட்டார்
Verse 2மனுஷனைப் பார்க்கிலும் இயேசு பெரியவர்
பிரபுக்களை பார்க்கிலும் இயேசு பெரியவர்
செல்வங்களைப் பார்க்கிலும் இயேசு பெரியவர்
பட்டம் பதவி பார்க்கிலும் இயேசு பெரியவர்
Verse 3அதிசயங்கள் செய்திடும்; இயேசு பெரியவர்
அற்புதங்கள் செய்திடும்; இயேசு பெரியவர்
நம்பினோரை வாழ வைக்கும் இயேசு பெரியவர்
நம்பிக்கையின் நங்கூரம் இயேசு பெரியவர்
Verse 4உனக்குள்ளே இருக்கின்ற இயேசு பெரியவர்
உலகிலுள்ள சாத்தானிலும் இயேசு பெரியவர்
உறங்காமல் காத்திடும் இயேசு பெரியவர்
உன் குறைவை நிறைவாக்கும் இயேசு பெரியவர்
Verse 5யோனாவிலும் பெரியவர் என்று பாடிடு;
சாலமோனிலும் பெரியவர் என்று கூறிடு
தேவாலயத்திலும் பெரியவர் என்று எண்ணிடு
பெரிய காரியங்களை எதிர் பாத்திடு